• Tue. Dec 10th, 2024

திரைப்பட இயக்குனர் என்றுகூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவரை சுற்றி வளைத்த போலீஸ்!..

திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.

தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.

ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.

அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.