• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குப்பை கொட்டும் இடமாக மாறி வரும் நகராட்சி தெருக்கள் மற்றும் சாலைகள்..,

BySubeshchandrabose

Jun 8, 2026

தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தூய்மை பணியாளர்கள் நகராட்சி வாகனம் மூலம் நேரடியாக வீட்டிற்கு சென்று குப்பைகளை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக குப்பை சேகரிக்கும் பணியில் தோய்வு ஏற்பட்டு குப்பைகளை சேகரிக்க பணியாளர்கள் முறையாக வராததால் பல்வேறு பகுதியில் இருந்து அள்ளிட்டு வரும் குப்பைகளை சிவாஜி நகர் மற்றும் பாரஸ்ட் ரோடு கரட்டுப் பகுதியில் உள்ள அந்தந்த தெருக்களில் நகராட்சி மூலமாக குப்பைகளை கொட்டி விட்டு செல்லுகின்றனர்.

மேலும் சாலைகளில் குப்பை போடுவதற்கு வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டியும் பராமரிப்பு இன்றி இருப்பதால் சாலையில் குப்பை கழிவுகள், மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது

நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டுவதால் நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட சாலைகளில் அகற்றப்படாத குப்பைகளால் கொசு உற்பத்தி ஏற்பட்டு, குழந்தைகள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சாலைகளில் மற்றும் தெருக்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு வசதி ஏற்படுத்தி குப்பை சேகரிக்கும் பணியை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.