உலகச் செய்திகள்
[wp-rss-aggregator feeds=”times”]
[wp-rss-aggregator feeds=”hindu1″]
- இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்பின் சாம்பியனாக டாடா திகழ்ந்தார்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
- லாவோஸ் நாட்டில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்குசந்தித்த அயல்நாட்டுத் தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய பெருமையைப் பறைசாற்றும் பொருட்களைப் பரிசளித்தார்.
- இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.
- இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதிக் குழு முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய படைகள் தற்போது ஆம்புலன்ஸ்களைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.
- இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வங்கதேச அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
- சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- லாவோஸில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு. காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.
- 2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகினை அடைவதற்கான அதன் முயற்சிக்காக வழங்கப்படுகிறது.
- இந்தியா – லாவோஸ் இடையே பாதுகாப்பு, ஒலிபரப்பு, சுங்க ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
ஜோதிடம்
- நல்லதே நடக்கும்
- சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
- மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.10 – 16
- நல்லதே நடக்கும்
- தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பங்குதாரரின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
தொழில்நுட்பம்
- விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய மிகப்பெரிய ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.
- டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோக்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரோபோக் களால் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.
- பல லட்சம் பேரால் பின்தொடரப்படும் ஒரு யூடியூபர் கட்டணமின்றி கிடைக்கும் ‘வால்பேப்பர்’ சேவையை மாதம் பத்து டாலருக்கு விற்பனை செய்வதுதான் புதிய சேவையா? எனப் பலரும் கேலி செய்தனர்.
- அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலமாக விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
- இந்தியாவில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது சில முக்கிய நகரங்களில் மட்டுமே பயனர் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய அரசிடமிருந்து கடந்த ஆண்டே பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.