• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..,

ByP.Thangapandi

Jun 5, 2026
  • உசிலம்பட்டி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் – ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது.,

இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி, பொறியாளர் சசிக்குமார் முன்னிலையில் நகர மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் வைகை அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது., இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு விவசாயத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதில் உசிலம்பட்டி நகராட்சி 8, 20,22,14, வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அங்குள்ள போர்வெல்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதனை சீரமைக்க நகரமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் இதுவரை சரி செய்யப்படவில்லை. தற்போது ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்கள் எந்த வார்டுகளுக்கு குடிநீர் வழங்க சொல்கிறார்களோ அந்த வார்டுகளுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தண்ணீர் வழங்கக்கூடிய ஒரே வார்டுகளுக்கு திரும்பத் திரும்ப தண்ணீர் வழங்காமல் மற்ற வார்டுகளுக்கும் குடிநீர் வழங்குமாறும், ஐந்து நாட்களுக்கு ஒரு வார்டு என ஒவ்வெரு வார்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் கவுன்சிலர்களின் பதவி காலம் இன்னும் நிறைவடையாத நிலையில் அதுவரை நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் எனவும் இல்லையெனில் 5000 பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என 8 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பூமாராஜா குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.