• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தமிழ் சங்க கூட்டமைப்பு மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்..,

மதுரையில் தமிழ் சங்க கூட்டமைப்பு மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் மதுரை மண்டலத் திற்கு உட்பட்ட மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மதுரை மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் முனைவர் அழகுராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் தாரை கவிஞர் இராஜமாணிக்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்ஷேக் நபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் கவிஞர் பொன் சந்திரன் கூட்டமைப்பின் நோக்கம் பற்றியும் மாநாடு குறித்த வரைமுறைகள் பற்றியும் விளக்கிபேசினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடத்துவது என்றும் இந்த மாநாட்டிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர்களை அழைப்பது என்றும், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அருப்புக்கோட்டை தொல்காப்பியன் நன்றி கூறினார்.