• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பல ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிப்பறை சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்..,

ByKalamegam Viswanathan

Jun 11, 2026

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி சுமார் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் அங்கு பயன்பாட்டில் உள்ள பழைய கழிப்பறையில் இருந்து கழிவுநீர் சாலையில் ஆறு போல ஓடுகிறது.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை திறக்கப்படாமல் இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த கழிவுநீர் சாலையில் வடிந்து ஓடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் பயணிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக புற காவல் நிலையம் ஒன்று அங்கு உள்ளது காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கழிவு நீரை மிதித்து கொண்டே காவல் நிலையத்திற்குள் செல்ல வேண்டிய அவலமும் உள்ளது.

இதனால் மாநகராட்சி ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்து புதிய கழிப்பறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இது மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கட்டுப்பாட்டில் அந்த புதிய கழிப்பறை இருப்பதால் அவர் திறக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு மாநகராட்சி ஆணையாளர் கழிப்பறையை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பேருந்து நிலையத்தில் உள்ளே சாலையில் ஓடும் கழிவு நீரை உடனடியாக அகற்றி கிருமி நாசினி தெளித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றன.