• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் ஒரு பெண் தீ குளித்ததால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jun 6, 2026

மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் உள்ள ராமராயர் மண்டபம் பகுதியில் சாலையில் ஒரு பெண் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

அதிக வாகனம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதியின் சாலையின் நடுவே ஒரு பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

45 வயது மதிக்கத்தக்க பெண் தீ குளித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் விசாரித்த , அந்தப் பெண்ணின் பெயர் வள்ளி (45)என்பது தெரிய வந்தது. யாரேனும் அவர் மீது தீ வைத்தனரா? அல்லது அந்தப் பெண் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாரா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த பெண் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். சாலை நடுவே ஒரு பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.