

THAZHAI NEWS & MEDIA
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகை துறையில், நேர்மையாகவும், துணிச்சலாகவும், உண்மையாகவும் வாசகர்கள் ஆகிய தங்களை எந்த வகையிலும் சலிக்காத வகையில், யார் சார்பில்லாமலும் உங்களின் கையில் தினமும் புது வித்தியாசமான செய்திகளுடன் தவழ விட வேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் டிஜிட்டல் முறையில் arasiyaltoday.com, Arasiyal Today Android App, Arasiyal Today Social Media, Arasiyal Today YouTube Channel என்ற நான்கு தளங்களில் தொடங்க இருக்கின்றேன். அதில் என்னுடைய எழுத்துக்களை மட்டுமல்ல, உண்மைச் செய்திகளை உள்ளவாறே உரைக்க வேண்டும், என்ற நோக்கத்துடன் பதிவிடலாம் என்று முடிவெடுத்த பின்பு தான், இதனை உருவாக்கி உள்ளேன்.
இருபத்து இரண்டு ஆண்டுகள் எனது செம்மையான இந்த பத்திரிகை பணியில் ஆசிரியர்களான திரு.டயஸ் காந்தி, திரு.ரூபன், திரு.ஜெயராமச்சந்திரன், திரு.விகேஷ், திரு.சாமிநாதன், திரு.குள.சண்முகசுந்தரம், திரு.S.P.இலட்சுமணன், திரு.திரிசக்தி சுந்தரராமன், திரு.R.சிங்கார வடிவேலன் என இவர்கள் மற்றும் எனது நண்பரும் தினகரன் உதவி ஆசிரியருமான, எழுத்தாளர் கவிதா குமார் அவர்களும், பாக்கியராஜ் ஆகிய என்னை புடம் போட்ட தங்கமாக மாற்றி, என்னை முழுமையாக உருவாக்கினார்கள். அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் ஒன்றே ஒன்று மட்டும் தான். உண்மைச் செய்தியை உள்ளவாறே உரக்கச் சொல்ல வேண்டும். அதை தயங்காமல் சொல்ல வேண்டும் என்று மட்டும் தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், அதை வாசகர்களாகிய நீங்களே என் எழுத்தின் வடிவத்தில் உணர்ந்திருப்பீர்கள், பத்திரிகை பணி சம்பந்தமாக நான் வெளியே செல்லும் போதும் சரி, கடந்து சென்ற ஆண்டுகளில் எனக்கு ஆலோசனைகளைக் கூறி பெரும் உதவியாக, உறுதுணையாக என் எழுத்து வடிவத்தில் இவர்களே இருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல மேலே சொன்னது போல அரசியல் செய்திகளில், அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களையும், அவர்களின் போலி முகத்திரையையும் கிழிக்க ஒரு போதும் தயங்கக் கூடாது என்று நம்பிக்கையும் ஊட்டியிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை கடந்த சில காலங்களில் உள்ளதை உள்ளவாறே எழுத முடியவில்லையே என்ற வேதனை என்னை நெஞ்சைக் கிழித்துக் கொண்டே இருந்தது. நம்மால் என்ன செய்ய முடியும். பணம் படைத்தவர்கள் மட்டும்தான் பத்திரிகையை நடத்த முடியும். இது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான், என்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று திரும்பிப் பார்த்த போது பணம் ஒன்றுமில்லை, எனக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த தன்னம்பிக்கையும், துணிச்சலும் மட்டும்தான் என் நெஞ்சில் தைரியமாக மேலோங்கி நின்றது. சோர்ந்து விடக்கூடாது என்றும், நம் எழுத்துப் பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்றும் பல இரவுகள் உறங்காமல் சீரிய சிந்தனையோடு, சிறிய முதலீட்டில் இணையதளம் மூலமாக அன்பான என் வாசகர்களுக்கு உண்மைச் செய்தியை கொடுக்க முடியும் என்ற உத்வேகத்தோடு நீண்ட ஆலோசனைக்குப் பின்பு ‘அரசியல் டுடே‘ என்ற பெயரை உங்கள் முன்னால் நிறுத்த முடியுமா? என்ற பலாயிரம் கேள்விகளைக் கேட்டு விட்டுத்தான் ‘அரசியல் டுடே‘ என்ற பெயரில் நான்கு தளங்களை உருவாக்கி உங்களிடமே ஒப்படைத்து விடலாம் என்று முடிவெடுத்து வர இருக்கின்ற ஆகஸ்ட் 4ம் தேதியன்று உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
ஒவ்வொரு செய்திகளின் மூலம் புது வெளிச்சம் பாய்ச்ச வாசகர்கள் ஆகிய உங்களின் ஆதரவை நீங்கள் எப்போதும் அளித்து கொண்டே இருப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
அரசியல் டுடே குடும்பத்தில் இருந்து உங்கள் ஆதரவுகளுடன்,
தா.பாக்கியராஜ்

MANAGING DIRECTOR AND CHIEF EDITOR
T.BACKIARAJ – MANAGING DIRECTOR/CHIEF EDITOR
A.VISALAKSHI – EXECUTIVE EDITOR
A. TAMILSELVAN – SENIOR SUB-EDITOR
M.JOHN DEVAMANI – SUB-EDITOR
REPORTERS
V. MUTHUPANDI(JEBARAJ)
A.TAMILMURUGESAN
A.RATHINAKUMAR
J.SUNDAR – MANAGER
MANAGEMENT COMMITTEE
KASIM – ADVISOR
ALAGURAJA PALANISAMY
M.BALAMURALI B.COM., LLB.
LEGAL ADVISORS
K.PARAMARAJ BA.BL. (DISTRICT JUDGE RTD)
S.PASUMPONPANDIYAN MA.BL.
G.RAVI BBA.BL.
M.JEGADEESAN MA.BL.
M.KARTHIKEYAN BA.BL.
G.ILANKALEESWARAN BA.BL
M.SANKAR BA.BL
TECHNICIANS
MAHADEVAN
