• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தங்க தமிழ்ச்செல்வன்..,

BySubeshchandrabose

Jun 8, 2026

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதியிலிருந்து திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் தினமான ஜூன் 3 ஆம் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

போடி மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை கடந்த 3 ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தங்க மோதிரத்தை அணிவித்தார்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கும், போடி அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

மேலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கும் பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் போடி மற்றும் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.