• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் அருகே அனுமதி இன்றி பட்டாசு திரி தயார் செய்த இடத்தில் வெடிவிபத்து ஒருவர் பலி..!

ByRadhakrishnan Thangaraj

Jun 10, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அருகே மாஞ்சோலை காலனியில் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த SR ரவிச்சந்திரன் என்பவர் சொந்தமான இடத்தில் மாட்டு பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாக மாட்டுப்பண்ணையை காலி செய்துவிட்டு சட்ட விரோதமாக பட்டாசு எலக்ட்ரிக் திரி தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த பட்டாசு திரி தயார் செய்யும் தொழிலுக்கு அசாம் மாநில சேர்ந்த கௌதம் கோஸ்
கௌதம் கோஸ் மனைவி சாபித்ரி கோஸ் இவரது மகன் மிராஜ் சஞ்சிப் ஆகியோர் அந்தப் பகுதியில் செட்டு அமைந்து தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த இடத்தில் செட் அமைப்பதற்காக வெல்டிங் வேலைக்காக சோலைச்சேரி பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன் அவருக்கு உதவியாக கிருஷ்ணாபுரம் பகுதி சேர்ந்த கண்ணன் கண்ணன் மகன் அழகு நம்பி ஆகியோர் வெல்டிங் வேலைக்காக சென்றுள்ளனர். வெல்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது வெல்டிங்கில் வந்த தீப்பொறி திரியில் பட்டு வெடித்து சிதறியதில் கோடீஸ்வரன் அழகு நம்பி ஆகியோர் பலத்த காயமடைந்து தப்பி ஓடி உள்ளனர்.

தகர செட்டில் பணியாற்றிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் செட்டுக்குள் மாட்டி கொண்டனர் இதில் கௌதம் கோஸ் மனைவி சாபித்ரி கோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கோடீஸ்வரன் மற்றும் சங்பிப் ஆகிய இருவரும் 85 சதவீத தீக்காயத்துடன் திருநெல்வேலிக்கு மேல் சீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்த அழகு நம்பி மற்றும் மிராஜ் ராஜபாளையம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரித்த எஸ் ஆர் ரவிச்சந்திரனை தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.