• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

துணி கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளை..,

ByP.Thangapandi

Jun 9, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி விலக்கில், செம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் ஆடவர்களுக்கான துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த துணிக்கடையை இன்று வழக்கம் போல திறக்க வந்த ராமர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்து சுமார் 35 ஆயிரம் மதிப்பிலான துணிகள், 19 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

ராமர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலிசார் கைரோகை பதிவுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில்,

மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த துணி மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இந்த காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த துணிக்கடையில் துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.