• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் முற்றுகை போராட்டம்..,

ByP.Thangapandi

Jun 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள கோட்டையூரில் 5503 என்ற எண் கொண்ட டாஸ்மார்க் மதுபான கடை இயங்கி வருகிறது.,

இந்த மதுபான கடையில் மது அருந்த வருவோர் அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த டாஸ்மார்க் கடையின் அருகிலேயே புகழ்பெற்ற விருமன் கோவிலும் இருப்பதால் கோவிலுக்கும் வந்து செல்வோர் அச்சத்துடனே வந்து செல்லும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் இந்த கடையை அகற்ற கோரி, இக்கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷ், உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் டாஸ்மார்க் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.,