• Mon. Jun 8th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மக்கள் அமைச்சரிடம் மனு அளித்ததில் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறி கிராம மக்கள் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jun 8, 2026

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாரிடம் இன்று திருப்பரங்குன்றத்தில் சேர்ந்த கிராம பொதுமக்கள் ஒரு தரப்பினர் மனு அளித்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் எனக் கூறிய நிலையில் இன்று திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் ஒரு பிரிவை சார்ந்த கிராம பொதுமக்கள் சார்பாக மனு அளித்த போது அமைச்சர் அந்த மனுவை ஏற்கவில்லை என்றும் தாங்கள் கூறியதைபாவக்கா மாவட்ட செயலாளர் தூண்டுதலின் பெயரில் முழுமையாக கண்டு கொள்ளவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தரப்பை சேர்ந்த சரவணன் கூறுகையில்:

சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரிடம் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயமா இன்னைக்கு நாங்க சந்திக்க போயிருந்தோம். என்ன காரணம் என்றால் நேத்து அவர் இரண்டு ஆண்டுகள் முன்னாடி என்ன இருக்கோ அதுபடி தான் நடக்கும்னு சொல்லியிருக்காரு. நீதியரசர், ஜி.ஆர். சுவாமிநாதன் ஐயா ஏற்கனவே இது இது விஷயமா திமுக ஆட்சி போனதுக்கு காரணமே ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புனால தான் போனது. அமைச்சர் இது தெரிஞ்சு சொல்றாரா, தெரியாம சொல்றாரா தெரியல. அவர் வந்து சட்டத்துறை அமைச்சர். அவர் ஏன் இந்த மாதிரி சொன்னாருன்னு தான், இன்னைக்கு மனு குடுக்க போயிருந்தோம். திருநகர்ல ஒரு மருத்துவ முகாம் சொல்லி, தவெக சார்பா ஒரு முகாம் நடத்துனாங்க. எங்களுக்கு தகவல் தெரிஞ்சு, நாங்க 10, 10:30-க்கு எல்லாம் ஒரு 10 பேருக்கு மேல திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் சார்பா இன்னைக்கு நாங்க போய் சந்திச்சிருந்தோம்.

சந்திச்சதுக்கு அந்த மனுவை கூட அவர் வாங்க விருப்பமில்லை. அங்க இருக்க சில நிர்வாகிகள் வந்து தடுத்து அவரை பேசவே விடல. அதாவது அந்த மனுவுக்குரிய ரெஸ்பான்ஸே இல்லை. திருப்பரங்குன்றத்துல பல விஷயங்கள் இருக்கு. தீபம் ஏத்துற விஷயம், இந்த சந்து பிரச்சனை, ஊரு டிராபிக். ஏகப்பட்ட விஷயம் கேக்கத்தான் நாங்க போயிருந்தோம். ஆனா எங்களுக்கு அதுக்குரிய பதில் இல்லை. நின்னு கூட பேசவில்லை எதனால் அவர் போனார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

பழைய நடைமுறைல தான் வரும்னு சொல்லி அமைச்சர் சொல்லிருக்காரு. இதான் தமிழக அரசோட நிலைப்பாடுன்ற மாதிரி எல்லாம் சொல்றாங்க. அடுத்த கட்ட நகர்வு குறித்த கேள்விக்கு:

அடுத்த கட்டமக ஏற்கனவே, மக்கள், திமுக, அதிமுக வேணாம்னு தான் மாற்று அரசியல இன்னைக்கு தவெக-வ கொண்டு வந்துருக்காங்க. அவங்கள கொண்டு வந்த காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா, அவங்க ரெண்டு பேரும் ஊழல்வாதின்ற மாதிரி ஏதோ கான்ஸ்பிரசி இருக்கறதால புது அரசு வந்துருக்கு. இந்த புது அரசுனாச்சும் வந்து எங்களுக்கு ஒரு நல்ல ஒரு தீர்ப்பை கொடுக்கும், நல்லது பண்ணும்னு பார்த்தா, இது வந்து திமுகவோட 2.0 மாதிரி தான் எங்களுக்கு தெரியுது.

அதனால நாங்க திருப்பி பழையபடி, முருகன்கோவிலுக்கு வந்து நாங்க எப்படி, நாங்க உள்ளூர் மக்கள். இந்த பாரம்பரியமா இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்து, எல்லாத்தையும் நாங்க பார்த்துட்டு இருக்கோம். இந்த அமைச்சர், எம்.எல்.ஏ.லாம் வருவாங்க, போவாங்க. நாங்க இங்க தான் கடைசி வரைக்கும் இருக்க போறோம். இத நாங்க சட்டப் போராட்டமா இல்ல, பழையபடி உண்ணாவிரதம் இருந்து, திருப்பி இந்த விளக்க ஏத்தாம விடமாட்டோம்.

ஏன்னா நீதியரசர் கொடுத்த தீர்ப்பு! மத்த யாரும் கொடுக்கல, நீதியரசர் கொடுத்த தீர்ப்புக்கு வந்து அவங்க மதிப்பளிக்கணும். ஒரு சட்டத்துறை அமைச்சர் வந்து! ஏற்கனவே ஏற்கனவே திமுக கவர்ன்மென்ட் கவுந்ததுக்கு காரணமே இந்த திருப்பரங்குன்றம் விஷயத்துனால தான் கவர்ன்மென்ட் கவுந்தது.

முதல்வர் கவனத்துக்கு பற்றிய கேள்விக்கு:

இது முதல்வர் கவனத்துக்கு போகணும். ஏன் இந்த அமைச்சர், அதுவும் ஒரு சட்டத்துறை அமைச்சர் இந்த மாதிரி பதிலளிக்கிறதுக்கு என்ன காரணம்? இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும், நான் மாற்றுக்கருத்து சொல்லல. அதே மாதிரி எங்களோட உணர்வையும் நீங்க புண்படுத்தக் கூடாதுல? ஏற்கனவே கலெக்டர் ஸ்ரீ, ஒரு லா அண்ட் ஆர்டர் கமிஷனர் இருந்தவரு, எல்லாருமே வேலை விட்டு போன காரணம் என்னாது? அவரை மாத்துன காரணம் திருப்பரங்குன்றம் முருகன் மேல கை வச்சதுனால தான், இன்னைக்கு இவ்வளவு தூரம் பிரச்சனையா ஆனது. திருப்பி நீங்களும் அந்த தப்ப பண்ணீங்கன்னா, அப்புறம் திமுக அரசுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.

கோரிக்கை என்னவா இருக்கு? என்ன செய்யப்போறீங்க அடுத்தது பற்றிய கேள்விக்கு:

எங்களுக்கு விளக்கு இந்த வருஷம் ஏத்தியாகணும். ஏன்னா போன முறை மக்கள், நீங்க பாத்துக்கோங்க, நீங்க பாத்துக்கோங்கன்னு இளைஞர்கள் கையில விட்டாங்க. இந்த முறை பொதுமக்கள் வந்து அதுக்குத்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது. நீங்களே திருப்பி அந்த திமுக அரசு பண்ண மாதிரி பண்ணீங்கன்னா, அப்புறம் என்ன பண்றது.

அவர் உங்களோட தொகுதி எம்.எல்.ஏ பற்றிய கேள்விக்கு:

திருப்பரங்குன்றம் சட்டமன்ற எம்.எல்.ஏ. 40 ஆண்டுகளுக்கு அடுத்து ஒரு அமைச்சர் வந்து உருவாக்கியிருக்காரு. இது திருப்பரங்குன்றம் வி.ஐ.பி. தொகுதியாகும்னு நாங்க எதிர்பார்த்தோம். ஆனா நடந்ததுல திருப்பரங்குன்றத்துக்கு இன்ன வரைக்கும் வரல. வராரு, அதாவது கட்சிக்கார நிர்வாகிகள் வீட்டுக்கு மட்டும் வராரு, போறாரு. இன்ன வரைக்கும், இந்தா பாருங்க, முழுவதும் ஆக்கிரமிப்பு. திருப்பரங்குன்றம் சந்துல ஏகப்பட்ட ஆக்கிரமிப்பு. திருப்பரங்குன்றத்தை பார்த்தாலே பேரிகார்டு. அநியாயத்துக்கு பேரிகார்டு இருக்கு. உள்ளூர் மக்கள் பௌர்ணமி, முகூர்த்த நாள்ல உள்ளூர் மக்கள் வாழ முடியல. ரொம்ப சிரமப்படுறோம். ஸ்கூல் வேன் ஆகட்டும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இங்க இல்ல.

சரி, அமைச்சர் தொகுதியா, வி.ஐ.பி. தொகுதி ஆயிடுச்சுன்ற ஒரு காரணத்துல சந்தோஷப்பட்டோம். ஆனா இவரும் திமுக அரசு மாதிரியே போயிட்டு இருந்தாருன்னா, இது நீடிக்காது. எங்களோட கோரிக்கை என்னன்னு கேட்டீங்கன்னா, மலையில வந்து தீபம் ஏத்தணும். அதுக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்ப எங்களுக்கு சரியா பயன்படுத்தி, அதை கரெக்டா கொண்டு வரணும்.

அடுத்த கட்ட போராட்டம் என்ன செய்யப்போறீங்க பற்றிய கேள்விக்கு:

அடுத்த கட்ட போராட்டம் உள்ளூர் மக்கள் இடம் கலந்து பேசி, திருப்பி உண்ணாவிரதமா இல்ல அறவழி போராட்டம், எல்லா போராட்டமும் நடத்த ரெடியா இருக்கோம். இன்னைக்கு தெருவுல இறங்கி நாங்க போராடப்போறோம். அதுவும் முக்கியமா பெண்கள்தான் இதுல இறங்கப் போறாங்க. ஏன்னா ஏற்கனவே தெரியும், மலை மேல எவ்வளவு பிரச்சனை இருந்துச்சு, எத்தனை பேர் கைதானாங்க, வழக்கு எத்தனை பேர் மேல வழக்கு இருக்கு, எல்லாமே இந்த மாதிரி நடந்துருக்கு. அதனால இனி திருப்பியும் தெருவுல இறங்கி போராட விட்றாதீங்க. ஏன்னா புது கவர்ன்மென்ட், உங்களுக்காண்டி மாத்தி போட்டுருக்காங்க ஓட்ட. நீங்க சரியா செய்வீங்கன்னு நாங்க நம்புறோம்.

இல்லையென்றால் உங்களுக்கு இதே திமுக-வுக்கு நடந்த நிலைமை பற்றிய கேள்விக்கு:

இதான் திருப்பி திமுக எப்படி போச்சோ, அவங்க கூட அஞ்சு வருஷம் ஆண்டுட்டு போனாங்க, நீங்க அதிகபட்சம் ஆளாம இடையிலயே போயிருவீங்க. ஏன்னா முருகன் வந்து சக்தி உள்ள பூமி இது தராசுக்கார பூமி, பார்த்து நடந்துக்கோங்க அவ்வளவுதான்.

ஏற்கனவே இதுனால ஒருத்தர் உயிர் போயிருக்கு பற்றிய கேள்விக்கு:

ஆமா, திமுக பூர்ணச்சந்திரன் என்ற ஒரு அன்பு சகோதரர் இறந்தாரு. அவரு திமுக-வோட அனுதாபி அவரு, அவரு கூட தீவிர திமுக. அதுக்கு திமுக வந்து இதுவரைக்கும் எதுவும் பண்ணல. ஆனா இருந்தாலும் அவரோட உணர்வுக்காண்டி மதிப்பளிச்சு, என்ன பண்ணனும்.

முதல்வர் கவனத்துக்கு இது போகணும். சி.எம் ஜோசப் விஜய் சார், இது உங்க கவனத்துக்கு வரணும். ஏன்னா ஒரு உயிரே இழந்துருக்கு, ஒரு நீதிமன்றம், ஒரு நீதித்துறை கொடுத்த உத்தரவை உங்களுக்கே, இது நடைமுறைப்படுத்துறதுக்கு என்ன இருக்கு என கிராம கமிட்டி உறுட்டினர் சரவணன் கூறினர்.