• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்த ஆண்டுக்கான பஞ்சாமிர்த பிரசாத ஸ்டால் ஏலம்..,

ByKalamegam Viswanathan

Jun 6, 2026

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று கோயிலுக்கு சொந்தமான வாகன காப்பகங்கள், பிரசாத ஸ்டால்கள், கோயில் கடைகள், நிலஙகள் ஆகியவற்றிற்கான பொது ஏலம் மற்றும் டெண்டர் நடைபெற்றது.

இதில் சரவணப்பொய்கை வாகன காப்பகம் 27 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு தொகையாகும் இதே போல் சுற்றுச்சூழல் வாகனகாப்பகம், காசி விசுவநாதர் கோயில் கடை ஆகிய ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதே போல் கோயிலுக்கு அதிக வருவாய் வரக்கூடிய பஞ்சாமிர்த ஸ்டால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து கோயில் துணை ஆணையர் ஞானசேகரன் கூறுகையில் ஜி எஸ் டி உள்ளிட்ட நிர்வாக காரணங்களால் அரசின் உத்தரவை தொடர்ந்து பஞ்சாமிர்த விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.