• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரயிலில் விழுந்து இருவர் தற்கொலை..!

ByKalamegam Viswanathan

Jun 10, 2026

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால பகுதியில் அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட இருவர் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இருவரின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீஸார் உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட இருவரும் கணவன் மனைவியா? இருவரும் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து தொடர்ந்து மதுரை ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.