• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் வருமானம் குறைவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அமைச்சர் பேட்டி..,

ByS.Ariyanayagam

Jun 8, 2026

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சரும், திண்டுக்கல்லுக்கு பொறுப்பு அமைச்சருமான விக்னேஷ் இன்று காலை வருகை தந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அம்மா உணவகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து அங்கு பணியாற்றும் பெண்களிடம் முறையாக ஊதியம் வருகிறதா என கேட்டறிந்தார்.

தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு,
மகப்பேறு பிரிவு பொதுப்பிரிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்

தொடர்ந்து செய்தியாளரிடம் அமைச்சர் விக்னேஷ்,

நான் கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எனது தாய் தந்தை இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்தவர்கள்
அதனால் திண்டுக்கல் மாவட்டம் எனது இரண்டாவது சொந்த மாவட்டமாகும்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தேன் பேருந்து நிலையத்தில் சுகாதாரம் முற்றிலும் இல்லை. பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் முறையாக இல்லை.

மொத்தத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரியை பொறுத்தவரை பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நன்றாக உள்ளது.

பேருந்து நிலையம் வேறு பகுதிக்கு மாற்றப்படுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை ஆய்வு செய்து அடுத்த கட்ட பணிகளை துவக்க உள்ளேன்

கடந்த ஆட்சி காலத்தில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி FL-2 பார்கள் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் தவறு அதன் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

படிப்படியாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் மூடப்படும்

717 டாஸ்மாக் கடைகளை மூடிய காரணத்தினால் அரசிற்கு ஆண்டிற்கு 8 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இருப்பினும் மக்கள் நலன் மட்டுமே முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசிற்கு முக்கியம். பிற துறைகள் மூலம் வருவாயை ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த பத்து தினங்களில் டாஸ்மார்க்கிற்கு வராமல் தனி நபர்களுக்கு கமிஷனாக சென்ற வருவாய் 1200 கோடியை அரசு கஜானாவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இது எங்களது அரசின் சாதனை

டாஸ்மாக் துறையில் இருந்து வரும் காலங்களில் வரும் வருவாய் அரசு கஜானாவிற்கு மட்டுமே வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் படிப்படியாக இந்தப் பணிகள் தொடங்கும்.

திண்டுக்கல் மாவட்டத்தை முற்றிலுமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு நான் தொடர்ந்து இந்த மாவட்டத்திற்கு அடிக்கடி வருகை புரிவேன்.

இவ்வாறு பேசினார்