• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அனுமதி பெறாத வழித்தடத்தில் இயங்கும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Jun 6, 2026

சிவகாசியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி, டி.ராமலிங்கபுரம் கோட்டையூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி, வரை இயக்குவதற்காக அனுமதி பெற்று இயங்கும் இரண்டு RSR மினி பேருந்துகள் மற்றும் சிவகாசியிலிருந்து வெம்பக் கோட்டைக்கு தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி, கோமாளிபட்டி,

பிள்ளையார் கோவில், வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் வரை மினி பஸ் இயக்குவதற்கு அரசு அனுமதி பெற்ற வழித்தடத்தில் இயக்கப்படாமல் நேர்வழியில் இயக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.

ஆகையால் அனுமதி பெற்ற வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.