• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டாடாஏசி வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாலிபர் பலி..!

ByP.Thangapandi

Jun 6, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25). ஆட்டு வியாபாரியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் மங்கல்ரேவு-லிருந்து சின்னக்கட்டளையை நோக்கி சென்ற போது உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் நோக்கி காய்கறி ஏற்றி சென்ற டாடாஏசி வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.,

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.,

தகவலறிந்த சேடப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,