ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள முள்ளிமுனை ஊராட்சியை சேர்ந்த ராமர். 35 வாயதான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். பின் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சவூதியில் மீன்பிடி தொழிலாளியாக பணி புரிந்து 6 மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் திரும்பி குடும்பத்துடன் சிறிது காலம் இருந்து மீண்டும் தொழில் செய்ய செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஊர் வந்த ராமர், கொரானா காரணமாக ஊரில் இருந்து ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி, மாலத்தீவு சென்று அங்கு 15 நாட்கள் தங்கிய பின்னர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சவூதிக்கு சென்றடைந்ததாக மனைவி கலை நிவேதியா மற்றும் குடும்பத்தினரிடம் தகவல் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி கடலுக்கு சென்ற அவர் 4 ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் மட்டும் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. அங்குள்ள அவருடைய நண்பர்கள் முலம் உடல் சொந்த ஊர் வந்துவிடும் என்று எண்ணியிருந்த நிலையில், அவர் இறந்து ஒரு மாதம் ஆகியும் இன்னமும் உடலை ஊருக்கு கொண்டு வரவில்லை.
இந்த நிலையில் உடலை சொந்த ஊர் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இன்று ஏழு மாத கர்ப்பிணியான மனைவி கலை நிவேதியா 2 மாத கை குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசனிடம் மனு அளித்தார்.