• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கே.டி ராஜேந்திர பாலாஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஆர். கே. ரவிச்சந்திரன்..,

ByK Kaliraj

Jun 9, 2026

விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆர். கே. ரவிச்சந்திரன் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தவர் பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும் தேர்தலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாறியதும் தமிழக வெற்றிக் கழகத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகனி, ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியிடம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வருகின்றனர்.