• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..,

Byஜெ.துரை

Jun 10, 2026

மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தனது இரங்கலை தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலினுடன் மக்களவை உறுப்பினர்களான டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் பாரதிராஜா இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான படைப்புகளின் மூலம் கிராமிய வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் உயிர்ப்பித்த இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.