• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா..,

BySeenu

Jun 7, 2026

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

கே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இணைச் செயலாளர் முனைவர் கோபி சந்த் மெஹ்ரு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.அவர் தனது உரையில், “பட்டம் என்பது கல்விப் பயணத்தின் நிறைவு அல்ல; புதிய வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளின் தொடக்கம். மாணவர்கள் தங்களது திறமைகளை சமூக நலனுக்காக பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவுடன் மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்” என்று வலியுறுத்தினார்.

மேலும், கல்வி, திறன்கள் (Skills), ஆன்மிகம் சமூக நலன் ஆகிய மூன்று துறைகளில் சமநிலையுடன் செயல்பட்டால்தான் முழுமையான வெற்றியை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 556 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில்,துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,என பலர் கலந்து கொண்டனர்.