• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் போலீசார் தீவிர ரோந்து பணி..,

ByS.Ariyanayagam

Jun 8, 2026

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,குற்ற செயல்களை தடுக்கவும் புறநகர் டிஎஸ்பி தலைமையில் தீவிர நடை ரோந்துபணி நடந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் சார்பு ஆய்வாளர் வாணி மற்றும் காவலர்கள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்ற செயலை தடுக்கும் நோக்கிலும் இரவில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நடை ரோந்து பணியின் போது பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்த பெண்களிடம் தங்களின் செல்போன்களில் SOS அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும் SOS APP-ன் பயன்களையும் எடுத்து கூறினார்.

மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து பேருந்து நிலையம் முழுவதும்தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.