தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் பாதாள சாக்கடை நீர் பொங்கி தெருக்களில் வழிந்து ஓடுகிறது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதாள சாக்கடை நீரை மிதித்து கடந்து செல்வதால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிப்பதோடு பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்திடம் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி நீர் வழிந்து ஓடுவதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் உள்ளதாக காயிதே மில்லத் நகர் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதாள சாக்கடை நீர் பொங்கி தெருக்களில் வழிந்து ஓடுவதை சரி செய்து சுகாதார சீர்கேட்டை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




