வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலம்..!
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து நிகழ்ச்சின் முதல் நாளில் பவளமாலை அலங்காரத்தில் பெருமாள் பவனி நடைபெற்றது. புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது.…
ஜெய் பீம் பட பாணியில் நரிக்குறவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள்… வீடு திரும்பாத அவலம்.. மீட்டுத் தர கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், 3 நாட்கள் ஆகியும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டுகின்றனர். வல்லம் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார்,…
இம்மாத இறுதிக்குள் பொங்கல் பரிசு பொருட்கள்….
பொங்கல் பரிசு பொருட்கள் இந்த மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, துறைமுகம் தொகுதியில் புதிதாக 3 இடங்களில் நியாயவிலை கடைகள் திறந்து…
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கமல்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் பூரண குணமாகி மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா…
பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையை மருத்துவமனை கழிவறையில் படுகொலை
தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதும், காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த…
குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை- சீரமைத்த டிஎஸ்பி க்கு பாராட்டு
விபத்தை ஏற்படுத்தி வந்த குண்டும் குழியுமான நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை 5-கிலோ மீட்டர் சாலையை 100-போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை வைத்து சீரமைத்த டிஎஸ்பி க்கு குவியும் பாராட்டு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்ல சுமார் 50-கிலோ…
புதுமண்டபத்திற்குள் புகுந்த மழை நீரால் வியாபாரிகள் அவதி
மதுரை மீனாட்சியம்மன் கோவில் எதிரே உள்ள புதுமண்டபத்திற்குள் புகுந்த மழை நீரால் வியாபாரிகள் அவதி மதுரையில் பெய்த கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரே உள்ள புது மண்டபத்திற்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து கனமழை…
நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, அதன்படி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் ரயில் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே…
ஒமைக்ரானால் அச்சப்படாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்…
ஒமிக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சமடையாமல் அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல்…
அடுத்தடுத்து மின் கம்பங்கள் வீட்டின் கூரைமேல் சாய்ந்து விபத்து- 50 குடும்பம் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைப்பு
நள்ளிரவு பெய்த மழையால் சேலத்தில் டிரான்ஸ்பார்மர் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் சாய்ந்து வீட்டின் கூரை மேல் விழுந்து விபத்து. மின்தடை ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 50 குடும்பத்தினர் உயிர்தப்பினர். சேலம் மாநகராட்சி பாரதியார் நகர் கொல்லம்பட்டறை பகுதியில் 50க்கும்…





