டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, அதன்படி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் ரயில் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

டிசம்பர் 6ஆம் தேதியை முன்னிட்டு தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, அதன்படி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,
மேலும் ரயில் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் மோப்பநாய் மூலமாகவும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.