கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில், கழக அம்மா பேரவை செயல்பாடுகளை ஊக்குவிப்பது, கழக வளர்ச்சி பணிகளை குறித்தும், தற்போது தட்டு தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசின் பொய் முகத்தை மக்களுக்கு விளக்கி கூறுவது தொடர்பாகவும், மீண்டும் கழகம் ஆட்சி கட்டில் அமர்த்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து மாபெரும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பேரவை நிர்வாகிகள் கோட்டை மணிகண்டன், மாரியப்பன், சுந்தர், கண்ணன், ஞானபிரகாசம், சுரேஷ்பாபு, முத்துராமலிங்கம், மதுவேல்ராஜ், அமிர்தாமகேந்திரன், முரசொலி மாறன், செல்வராஜ், முத்துசாமி, கிருபானந்தமுருகன், கருப்பசாமி, நாகேந்திரன், மாரிமுத்துபாண்டியன், பிரதீப், காளிதாஸ், ரத்னசபாபதி, அந்தோணி சேவியர், மாரியப்பன், சோமசுந்தர பாண்டியன், வில்சன், கணபதிராமன், ஐயப்பன், செண்பகராஜ், பொன்னுதுரை, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.விஜயகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
பி.வரதராஜபெருமாள் ஆகியோர் வரவேற்புரை ஏற்றினார் .
இந்த கூட்டத்தில் கழக வர்த்தக பிரிவு செயலாளர் ,முன்னாள் அமைச்சர்
சி.த .செல்லப்பாண்டியன்,கழக அமைப்பு செயலாளர் என்.சின்னதுரை, மாநில நிர்வாகிகள் ஆறுமுக நயினார், பெருமாள் சாமி, இரா.ஹென்றி ,மைக்கேல்பிரபு, முன்னாள்: சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,பெருமாள், மற்றும் திருப்பாற்கடல், முடிமன் ராமசாமி, ஈஸ்வரமூர்த்தி தேவேந்திரன், செய்யது, முஸ்தபா பாசறை எம்.ஆர்.வி.கவியரசன்,செல்வகுமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய,பேரூர்,வட்ட,கிளைகழக நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மேற்கு பகுதி கழகச் செயலாளர் முருகன் நன்றியுரை ஆற்றினார்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, 38 வருவாய் மாவட்டத்தில் உள்ள, கழக ரீதியில் இருக்கும் 85 மாவட்டங்களில் கழக அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை, நெல்லை, தற்போது மூன்றாவது வாரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தை பார்க்கின்ற பொழுது இனி எந்த தேர்தல் என்றாலும் அதிமுக வெற்றி பெறும் அதே போல எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக்கும் வரை கழகத் தொண்டர்கள் ஓயமாட்டார்கள் என்பது தான் இந்த கூட்டம் கடல் அலை போல சாட்சியாக உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவிற்கு 100 சகவீதம் சாதகமாக இருந்தது .ஆனால் ஜென்சி தலைமுறையை மூளைச்சலவை இன்றைக்கு கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் விஜய் முதலமைச்சராகி உள்ளார்.
விஜய் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? ஜீவாதார பிரச்சனைக்காக பட்டினி போராட்டம் செய்தாரா? தமிழக உரிமைக்காக சிறை சென்றாரா? எந்த தியாகமும் செய்யவில்லை . டிஜிட்டல் மீடியா மூலம் வீடியோவை பதிவு செய்துதான் சாதனை.
எடப்பாடியாரிடம் என்ன குறை கண்டீர்கள். நான்கரை வருடம் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு சாதனை திட்டங்களை செய்தார் .ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த பொழுது ஒரு மருத்துவ கல்லூரியை கூட கொண்டு வரவில்லை. குடிமராமத்துதிட்டம் , ஒரே ஆண்டில் ஆறு புதிய மாவட்டம் கொண்டு வந்தார், அதேபோல 7.5 சகவீத மருத்துவ இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார் .கொரோனா காலங்களில் மாணவ சமுதாயம் மனநிலை பாதிக்கப்பட கூடாது என்று ஆல் பாஸ் கொண்டு வந்தார் இப்படி ஜென்சி தலைமுறைக்கு பல்வேறு திட்டங்களை எடப்பாடியார் வழங்கினார் .

சட்டசபையில் முதல்வர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது அதில் அண்டை நாடுகள் கூட பகைநாட்டில் பேச்சுவார்த்தைக்கு மூலம் பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று அடிப்படையில் காவிரி பிரச்சனைக்கு பக்கத்து மாநிலத்தில் பேச்சுவார்த்தையில் அவமானம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறுகிறார் அப்படி வந்தால் விஜய்க்கு இல்லை, தமிழ் இனத்திற்கு அவமானம். முதல்வருக்கு தலைகுனிவென்றால் அது மக்களுக்கும் தலைகுனிவாகும் என்பது கூட விஜய்புரிந்து கொள்ளவில்லை
இன்றைக்கு காவேரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவேரி ஒழுங்காற்று குழு ,காவேரி மேலாண்மை வாரியம் தீர்ப்பை கூட கர்நாடக முதல்வர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஒரு லட்சம் குறுவை சாகுபடி வீணாய் போய்விட்டது .அடுத்த ஜென்மம் இருந்தால் நான் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று விஜய் கூறினார் இந்த ஜென்மமே போதும் அடுத்த ஜென்மம் என்றால் தாங்க முடியாது.
குறிப்பாக எடப்பாடியார் விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார் ஏனென்றால் விவசாயிகளுக்கு அம்மா ஆட்சியில் வறட்சி நிதி வழங்கப்பட்டது என்று கூறினார், அதே போல எதிர்க்கட்சித் தலைவரும் கூறினார்.குறுவை சாகுபடி வழங்கப்பட்டதை, வறட்சி நிவாரணம் என்று முதலமைச்சர் கூறுகிறார் .குறுவை சாகுபடி வழங்கப்பட்ட நிதியில் உரம்,விவசாய உபகரணம் வாங்க முடியும் என்பதை கூடமுதல்வருக்கு தெரியவில்லை .

நிதி அமைச்சர் சட்டசபையில் எப்படி பேசுவது என்று தெரியவில்லை. கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மீன்பிடி தடை காலங்களில் வழங்கப்படும் 8000 நிவாரணம் நிதியை 20,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என விஜய்கூறினார் .ஆனால் நிதி அமைச்சர் சட்டசபையில் தற்போது மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாயை 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறுகிறார். நிதி அமைச்சர் ஏற்கனவே வாசித்து பார்த்தாரா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் விஜய்யின் ஆட்சியின் ஆயுள் காலம் எண்ணப்பட்டு வருகிறது.
நாட்டு நலனுக்காக மக்கள் நலனுக்காக கடைக்கோடி தொண்டன் எடப்பாடியாரிடம் ஆலோசனை சொன்னால் கேட்பார். ஆனால் கட்சித் தொண்டனுக்கு எதிராகவும், ஜனநாயக எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் ஆலோசனை யார் சொன்னாலும் எடப்பாடியார் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் .
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் மெஜாரிட்டி இல்லாமல் 35 சதவீதம் வாக்குகளை மட்டும் விஜய் பெற்றுள்ளார் .65 சதவீதம் பேர் விஜய் வேண்டாம், விசில் வேண்டாம் எதிராக உள்ளனர் என்பதை விஜய் மறக்க கூடாது .
புரட்சித்தலைவர் படம் வரும்போது ரசிகர்கள் கையில் சூடம் ஏந்தி புரட்சித்தலைவர் வாழ்க என கோஷம் போடுவார்கள். இன்றைக்கு ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆன பொழுது காவிரி தண்ணீர் வந்தது போல அமைச்சர்கள் அழுதார்கள் ஏன் என்று கேள்வி கேட்டால், இது விஜய்க்கு கடைசி படம் என்று கூறுகிறார்கள் விஜய் படத்தில் நடிக்கவில்லை ஆனால் தற்போது தலைமைச் செயலகத்தில் நடிக்கிறார் மக்களும் பார்த்து கொண்டு வருகிறார்கள்.
அதேபோல லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று விஜய் கூறுகிறார். சட்டமன்றத்தில் நீர்வளத் துறையில் மூன்று சதவீதம் கேட்டதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார். அதேபோல கனிம வளத்துறையில் முறைகேடு நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு எதுவும் செய்யவில்லை ஆனால் பஞ்ச் டயலாக் மட்டும் விஜய் பேசுகிறார். அரசு வேலையை த.வெ.க கட்சியை வளர்க்க பயன்படுத்துகிறார் என்பதை நீதிமன்றமே விஜய்க்கு இன்றைக்கு குட்டு வைத்து விட்டது .
ஆட்சியை பிடிக்க மெஜாரிட்டிக்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு பதவி ஆபர் வழங்கினார் விஜய் மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என 47 தொகுதிகளில் மக்கள் வாக்களித்தனர் .அதில் 25 சட்டமன்ற உறுப்பினர்களை எடப்பாடியாரின் ஒப்புதல் பெறாமலே ஆதரவு தெரிவிக்க அவர்களுக்கும் அமைச்சர் ஆபர் வழங்கினார் .
இன்றைக்கு எடப்பாடியாரின் தூய மனம் வென்று விட்டது. அதிமுகவை பலவீனபடுத்த விஜய் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டது .இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடியாரிடம் வந்து விட்டனர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.வலையை வீசி மீன் பிடிக்கலாம் என்று நினைத்தார் அதில் அதிகாரம் சுவைத்த மீன்கள் சிக்கலாம் ஆனால் பட்டினி கிடந்தாலும் இந்த இயக்கத்தை போக மாட்டோம் எனும் உண்மையான தொண்டர்கள் சிக்க மாட்டார்கள்.
தற்போது ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தார்கள் தற்போது இழவு பாத்த கிளியாக எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள். இதில் கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர் மக்கள் தவிக்கிறார்கள் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்றுதான் இரட்டை இலைக்கு தான் மக்கள் வாக்களித்தார்கள் .ஆனால் இன்றைக்கு மக்கள் தீர்ப்பை மதிக்காமல் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்
அதிமுக தொண்டர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் இந்த இயக்கத்தை போல எந்த இயக்கத்திற்கும் இதுபோல தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடையாது .
அதிமுகவை யாராவது அழிக்க நினைத்தால் தொண்டர்கள் கொதித்து எழுவார்கள் அதிமுகவின் தொண்டன் வயிறு பற்றி எரிந்தால் அதிமுகவை அழிக்க நினைப்பவர்களின் வம்சம் நாசமாக போகிவிடும்.
இன்றைக்கு விஜயின் நட்பு வட்டாரங்கள், ஆலோசராக நியமிக்கப்படுகின்றார்கள் அதேபோல் அரசு பதவியில் நியமிக்கப்படுகிறார்கள் ஆனால் அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை .
தனி ஒருவன் நலன் முக்கியமா, கட்சி நலன் முக்கியமா என்றால், கட்சி நலன் தான் முக்கியம்.தனிநபர் நலன் என்றைக்கும் வெற்றி பெறாது. இன்றைக்கு ஜென்சி தலைமுறையிடம், கவர்ச்சி வசனத்தால் ஆட்சியில் அமைந்துள்ள விஜய் என்ன தியாகம் செய்ததை என்பதை கூற முடியுமா?
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்களில் எடப்பாடியார், சீமான், நயினார் நகேந்திரன், செல்வப் பெருந்தகை ஆகியோர் போட்டியிட்டனர் இதில் எடப்பாடியார் மட்டுமே வெற்றி பெற்றார். அதில் 98 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இன்றைக்கு விஜய் 6 மணிக்கு மேல் பார்க்க முடியாது அந்த சூழ்நிலையில் தான் தமிழகம் உள்ளது. இனி எந்த தேர்தல் என்றாலும் அதிமுகவிற்கு வெற்றி சாதகமாக உள்ளது.
இன்றைக்கு ஜென்சி தலைமையே உங்களுக்கு சரியான அரசியல் களம் அம்மா பேரவை தான் .உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எடப்பாடியார் முதலமைச்சராகும் வரை நம் களப்பணி ஓயாது என கூறினார்





