• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பிரியாணி கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பு வீரர்கள்..,

ByKalamegam Viswanathan

Aug 8, 2026

மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயினை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.