• Tue. Mar 21st, 2023

இம்மாத இறுதிக்குள் பொங்கல் பரிசு பொருட்கள்….

Byகாயத்ரி

Dec 4, 2021

பொங்கல் பரிசு பொருட்கள் இந்த மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, துறைமுகம் தொகுதியில் புதிதாக 3 இடங்களில் நியாயவிலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களில், 7 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பரிசு பொருட்கள் இந்த மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டார். நியாயவிலை கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *