ஈபிஎஸ் ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்பொழுது யூபிஎஸ்-யை தேடுகிறார்கள். சிவகாசி மே தின பொதுக்கூட்டத்தில் கே.டி.ஆர் பரபரப்பு பேச்சு!
சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்டமும், அண்ணா தொழிற்சங்கமும் சேர்ந்து மே தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி மைக்கை பிடித்தும்.., நான் குண்டக்கமண்டக்க பேசுவேன்,…
மின்னல் ஒளியில் பிரம்மணடமாக ஜொலித்த மதுரை..
மதுரை மாவட்டம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது, மதுரை மாநகர் பகுதிகளான தமுக்கம், கோரிப்பாளையம், கே.புதூர் செல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனிடையே திருநகர் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.…
எங்கள் கட்சிக்குள் இருந்த பிரச்சினையால் விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதியில் திமுக வெற்றி பெற்றது! முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் பேச்சு..,
ராஜேந்திரபாலாஜியை காவல்துறை கைது செய்யவில்லை அவரே சரண் அடைந்தார் சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசிய பேச்சுதான் இவை.., கண் அசைத்தால் திமுகவிலிருந்து ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து விடுவார்கள்,இனி எப்பொழுது தேர்தல்…
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் ஆண்டு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் ப்ளவர் பள்ளியின் 17 வது ஆண்டு விழா தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருளானந்தம் தலைமை தாங்கினார் பாதிரியார் ஜஸ்டின் திரவியம் இறை வழிபாட்டுடன் விழாவை துவக்கி வைத்தார்…
இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பரிசு பொருட்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது ஆதம் அவர்கள் தனது வார்டு மக்களுக்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புனித மாதமான ரமலான் மாதத்தின் ரம்ஜான் பண்டிகை அன்று பிரியாணி செய்து சாப்பிடுவதற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அனைத்து…
மதுரையில் பட்டப்பகலில் 67 பவுன் நகை கொள்ளை!
மதுரை மாவட்டம் வீரபஞ்சான் அருகேயுள்ள மீனாட்சிநகரில் வசித்து வருபவர் முருகன், சோலார் பேனல் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தொழில் நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு…
கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா . கொடியேற்றத்துடன் தொடங்கியது
கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திருமாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கழுகுமலை காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ், சமூக ஆர்வலர்…
மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 6ம் வகுப்பு மாணவி!
தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுப்பற்காக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள்…
கழுகுமலையில் ஏஐடியூசி சார்பில் மே தின விழா.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஏஐடியூசி சார்பில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கழுகுமலை சிபிஐ நகர செயலாளரும், ஏஐடியூசி வட்டார சங்க தலைவருமான சிவராமன் தலைமை வகித்தார். ஏஐடியூசி நிர்வாகி மீனாட்சி…
கழுகுமலையில் சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா மற்றும் கொடியேற்று விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிபிஎம் கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் தலைமை வகித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சீனிப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.…