• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூரில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் போட்டியிடுகிறார்.

இவர் இன்று வேடசந்தூரில் கடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமிய மக்களிடம் சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்க்காக வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

உடன் வேடசந்தூர் அதிமுக நகரச் செயலாளர் பாபுசேட், அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சேட்டை கார்த்திக் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.