தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஏஐடியூசி சார்பில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கழுகுமலை சிபிஐ நகர செயலாளரும், ஏஐடியூசி வட்டார சங்க தலைவருமான சிவராமன் தலைமை வகித்தார். ஏஐடியூசி நிர்வாகி மீனாட்சி சுந்தரம், ராமலிங்கம், கரடிகுளம் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அங்குள்ள கொடிக்கம்பத்தில் எட்டப்பன் கொடியேற்றினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் சங்கரலிங்கம் கொடியேற்றினார். தொடர்ந்து காளவாசல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் பால்ராஜ் , மேலபஜார் பகுதியில் உள்ள கொடிக்கம்பத்தில் சிதம்பரம் ஆகியோர் கொடியேற்றினர். இதில் இளைஞரணி செயலாளர் ரகுராமன், பெருமாள், கணேசன், நாகராஜ், பாஸ்கர், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார சங்க தலைவர் சிவராமன் செய்திருந்தார்.