• Fri. Sep 22nd, 2023

மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 6ம் வகுப்பு மாணவி!

தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுப்பற்காக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கொரானா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் நிவாஷினி என்ற மாணவி நான்கு மண்பானைகள் மீது நின்றுகொண்டு 10 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இவரது உலக சாதனை முயற்சியை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு அங்கீகரித்து அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed