• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பட்டப்பகலில் 67 பவுன் நகை கொள்ளை!

மதுரை மாவட்டம் வீரபஞ்சான் அருகேயுள்ள மீனாட்சிநகரில் வசித்து வருபவர் முருகன், சோலார் பேனல் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தொழில் நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 67 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.