

ராஜேந்திரபாலாஜியை காவல்துறை கைது செய்யவில்லை அவரே சரண் அடைந்தார் சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசிய பேச்சுதான் இவை..,
கண் அசைத்தால் திமுகவிலிருந்து ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து விடுவார்கள்,
இனி எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.
ராஜேந்திரபாலாஜி வழக்கிற்கு பயப்படுபவர் அல்ல .
ராஜேந்திரபாலாஜியை காவல்துறை கைது செய்யவில்லை அவரே சரண் அடைந்தார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளை பந்தாடிக்கொண்டிருக்கிறார் .
எங்கள் கட்சிக்குள் இருந்த பிரச்சினை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதியில் திமுக வெற்றி பெற்றது .
எங்கள் கட்சிக்குள் இருந்த கருப்பு ஆடுகளால் தோல்வியடைந்தோம், தற்பொழுது கருப்பு ஆடு யார் என்பதை கண்டறிந்துவிட்டோம்
பட்டாசு தொழிலையும் தீப்பெட்டி தொழிலையும் அழிக்க நினைக்க கூடாது .
பட்டாசு தொழிலை அழிக்க நினைத்தால் அதிமுக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும்.
அரசு அதிகாரிகள் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறார்கள் என்று பேசினார் ராஜவர்மன்.

