மதுரை மாவட்டம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது, மதுரை மாநகர் பகுதிகளான தமுக்கம், கோரிப்பாளையம், கே.புதூர் செல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனிடையே திருநகர் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
அப்போது மின்னல் வெட்டிய காட்சிகளை அப்பகுதி மக்கள் செல்போனில் தத்துருவமாக வீடியோ காட்சி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மின்னல் ஒளியில் அப்பகுதி பிரம்மணடமாக ஜொலிக்கும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கிறது.