• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அர.சக்கரபாணி உறுதி..,

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
திமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தொப்பம்பட்டி ஒன்றியம் கள்ளிமந்தையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 60,254 இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொகுதியில் 146 நியாய விலை கடைகள் புதிதாக கட்டப்பட்டு 123 நியாயவிலை கடைகள் முழுநேரம் மற்றும் பகுதிநேர கடைகளாக மாற் றப்பட்டுள்ளது.

மார்க்கம்பட்டி ஊராட்சி யில் ரூ.120 கோடி மதிப்பீட் டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.19 கோடி மதிப்பீட்டில் குழந்தை வேலப்பர் மலைக்கோவிலில் கிரிவலப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் ரூ.150 கோடியில் 100 புதிய சமுதாயக்கூடங்கள் கட் கப்பட்டுள்ளது.

திமுக தலைமையில் மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின் கள்ளிமந்தையம் தனி வட்டமாக உருவாக்கப்படும். ஒட்டன்சத்திரம் வேளாண் கல்லூரி அமைக்கப்படும்

பெண்களுக்காக பெண்கள் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்களை முதல்வர் தீட்டி செயல்படுத்தி வருவது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. மகாகவி பாரதி பெண்கள் முன்னேற வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னுக்கு வர வேண்டுமென பாடுபட்டார். தற்போது மகாகவி பாரதி இருந்திருந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை பார்த்து உண்மையிலே பாராட்டி, பெருமிதம் கொண்டிருப்பார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து பெற்றுத் தரவும் அனைவரும் மறவாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

உடன் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக்கு நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.