தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா மற்றும் கொடியேற்று விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிபிஎம் கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் தலைமை வகித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சீனிப்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிஐடியூ சங்க தலைவர் கருணாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சிஐடியூ மாவட்ட தலைவர் கொம்பையா, செயலாளர்கள் முருகன், முத்துபாண்டி, துணை செயலாளர் கார்த்திக், பொருளாளர் அய்யப்பன், துணை பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.