• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

நூல் மற்றும் மூல பெருள்கள் விலை உயர்வால் நாள் ஒன்றுக்கு 3கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு..,

ByRadhakrishnan Thangaraj

Apr 17, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 100க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதுக்கு நேரடியாக 3000 பேரும் மறைமுகமாக பத்தாயிரம் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய (பேண்டேஜ் ) மருத்துவத் துணி இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

நூல் விலை மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மருத்துவ துணி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரான் மற்றும் ஈராக் போர் நடப்பதால் 25 கோடி மதிப்புள்ள உற்பத்தி செய்த பேடேஜ் அதாவது மருத்துவ துணி தேக்கமடைந்துள்ளது. ஆகையால் மந்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் விரைவில் 23.04.2026 முதல் 26.04.2026 நான்கு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இன்று நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு மூன்று கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் என மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.