கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திருமாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கழுகுமலை காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ், சமூக ஆர்வலர் தமிழர் சிவா மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மே மாதம் 1 ம் தேதி காலை 6 மணிக்கு அரண்மனை பூஜை மற்றும் இரவு 11 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடக்கிறது. 2 ம் தேதி மற்றும் 3 ம் தேதி, 4 ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடக்கிறது. 5 ம் தேதி மாலை 4 மணிக்கு அன்னமூத்திரி பூஜை மற்றும் ஆத்தியப்பசுவாமி வேட்டை ஆடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6. மணிக்கு ஆத்தியப்பசுவாமி க்கு படி பூஜை நடக்கிறது. 6 ம் தேதி மஞ்சள் நீராட்டத்துடன் கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 8 ம் தேதி எட்டாம் பொங்கல் விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை திருமாளிகை ஆதீன குரு திருமால்சுவாமிஜி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் அனந்தகிருஷ்ணன்ஜி, செல்லச்சாமிஜி, சங்கரேஸ்வரன்ஜி, திம்மப்பசாமிஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.
கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா . கொடியேற்றத்துடன் தொடங்கியது
