• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இது துரோகத்துக்கு கிடைத்த பரிசு! – கருணாஸ்.!

துரோகம் செய்தவர் தோல்வியை தான் சந்திப்பர் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுக கவுன்சிலர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். நேற்று தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு அதிமுக வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இன்று ஒருவர் திமுகவில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் துரோகம் செய்தோர் தோல்வியை சந்திப்பர் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்து உடைத்து சுக்குநூறாக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.