• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோட்டூர் அரசினர் கல்லூரி வளாகத்தில் மையக்கட்டடத்தை திறந்து வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்..,

தேனி மாவட்டம் கோட்டூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தரத்தில் சிறப்பு திறன்மிகு மையக்கட்டடம் மாவட்ட வருவாய் அலுவலர் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முடிவடைந்த கட்டிட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

அதனைத் தொடர்ந்து இன்று தேனி மாவட்டத்தில் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் திறந்து வைத்து இயந்திர உபகரணங்களை ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக கல்லூரி நிர்வாகம் சார்பில்மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .