• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கண்டித்து, தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..,

ByPrabhu Sekar

Aug 4, 2026

​தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை அவமதிக்கும் விதமாக அவர் பேசியதாகத் தெரிவித்து, தவெக மகளிர் அணியினர் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் தவெக தரப்பில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

​தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்
​ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு தண்ணீர் வர வேண்டும்
​என்று குறிப்பிட்டிருந்தார்.

​இதையடுத்து, முதல்வர் விஜய்யை அவர் இழிவாகப் பேசியதாகக் கூறி, தவெகவினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய வந்த போலீசாரைத் தடுக்க முயன்ற முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக வழக்கறிஞர்களை போலீசார் தடுத்ததால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

​இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை போலீசார் இன்று கைது செய்தனர்.