• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராஜபாளையம் திமுக வடக்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிரான கோஷங்களை எழுப்பி சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.