• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உதயநிதி கைது நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது…

ByK Kaliraj

Aug 4, 2026

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இன்று உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்

உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகரம், ஒன்றியம், வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் ஏராளமானோர் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இது போன்ற கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் முழுமையான அரசியல் அறிவு பற்றி நடந்து கொள்வதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பிய திமுகவினர் திடீரென சாத்தூர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

சாத்தூர் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.