நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 7வது வார்டில் திமுக, அதிமுக, அமுமுக, நாம்தமிழர், சுயேட்சை என 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த 7-வது வார்டில் 438 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 25 வயதான பிரபா ஷாமிலி ஜீவா என்ற பெண் வேட்பாளர், திமுக சார்பில் போட்டியிட்டார். இதில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 216 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற செய்த பொதுமக்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சருக்குக்கும், திமுக கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியினை தெரிவித்தார். மேலும் தனது வார்டில் மக்களுக்கு மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ள மேம்பாட்டு பணிகளை செய்து கொடைக்கானலில் உள்ள 24 வார்டுகளில் தனது வார்டினை சிறந்த வார்டாக மாற்றப்போவதாக பேட்டியளித்தார்.
மேலும் இவர் அரசியல் அறிவியல் பயின்றுள்ளதாகவும், வழக்கறிஞராக பணி புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொடைக்கானலில் முதன்முறையாக இளம்பெண் வெற்றி பெற்றதும் இதுவே முதன் முறையாகும் .