• Sat. Jun 10th, 2023

அரசியல்

  • Home
  • உ.பி.,யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் :கருத்து கணிப்பு தகவல்

உ.பி.,யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் :கருத்து கணிப்பு தகவல்

உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று 7 முன்னணி ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.…

தேர்தலுக்காக மட்டுமே அறிக்கை! -திமுக மீது செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளையோட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றி…

அடுத்த முக்கிய விக்கெட்டும் அவுட் …பின்னடைவை சந்திக்கும் பாஜக?

கோவா முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான லட்சுமிகாந்த் பர்சேகர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்த நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.64 வயதான பர்சேகர் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “கட்சியில் தொடர விருப்பமில்லை. இன்று மாலை,…

புதிய நாடாளுமன்றக் கட்டிட செலவு ரூ.1,250 கோடியாக அதிகரிப்பு ?

புதிய நாடாளுமன்றத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திட்டமிட்ட செலவை விட ரூ.1,250 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, `மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி’ திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் கட்டுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர…

பள்ளி மாணவி இறப்பில் ஆதாயம் தேடுகிறதா பாஜக?

அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகற்பாளையம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் திரு. முருகானந்தம். இவரது முதல் மனைவியின் மகள் ராகவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது முதல் மனைவி கனிமொழி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்ததை அடுத்து, தனது மகளை தஞ்சை மாவட்டம்…

கோவை உடன்பிறப்புகளை எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட, கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற கூடுதல் கவனம் தி.மு.க-விடம் இருக்கிறது. காரணம்,…

தரமற்ற பொருட்கள்; நிறுவனங்கள் மீது நடவடிக்கை! முதல்வர் உத்தரவு.!!

பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி…

அமைச்சர் மூர்த்தியை அடுத்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கும் கொரோனா

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆனால், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தற்போது வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இதனிடையே, கொரோனா பாதிப்பால்…

அரசு நிலத்தை அபகரிக்கும் திமுக நகர பொறுப்பாளர்.. முதலமைச்சரின் பேச்சு காத்தோட போச்சா..!மக்கள் கொந்தளிப்பு

கீரிப்பட்டியில் அரசு ஊழியர்களை மிரட்டி வரும் திமுக நகர பொறுப்பாளர், மன உளைச்சலில் கூட்டுறவு சங்க ஊழியர்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், இந்த ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்..! இது அண்ணா மீது, கலைஞர் மீது…

சேலத்தில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கடத்தலால் பரபரப்பு..!

கத்திமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்கள் இருவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக,…