• Fri. Apr 26th, 2024

பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்

ByA.Tamilselvan

Jun 9, 2023

அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.
மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய சுயயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1995 முதல் 1997 வரை பா.ஜ.க யின் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் இவர் பாஜகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
2002ம் ஆண்டு அதிமுக சார்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2007, 2012 ஆகிய இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு மாநிலங்களைவை உறுப்பினர் காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அப்பதவிக்கு மைத்ரேயனை அதிமுக தலைமை பரிந்துரைக்கவில்லை. இதையடுத்து, நடைபெற்ற 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் இவருக்கு வாய்ப்பு வழங்க அதிமுக தலைமை மறுத்து விட்டது.
இதற்கிடையே, அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலில், ஓபிஎஸ்-ஐ சந்தித்ததன் காரணமாக கடந்த 2022ம் ஆண்டு அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாஜகவில் இணையப் போவதாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில், பாஜகவில் மைத்ரேயன் இணைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *