• Tue. Apr 16th, 2024

தமிழகத்தை குட்டிச்சுவராகி விட்டார் ஸ்டாலின் -ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றசாட்டு

ByKalamegam Viswanathan

Jun 10, 2023

மோசமான நிர்வாகசீர்கேட்டால் தமிழகத்தை குட்டிச்சுவராகி விட்டார் ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றசாட்டு
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம், சிவரக்கோட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் திரும்ப பெரும் களஆய்வு நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார் கள்ளிக்குடி ராஜா முன்னிலை வகித்தார் .இதில் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
மற்றும் இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக துணை செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, துணைச் சேர்மன் கண்ணன், மு.சி.சோ.சி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு ரத்து செய்து விட்டது. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள், ஐந்து பவுன் நகை அடமானம் வைத்தால் திருப்பி தருவோம் என்று கூறினார்கள் தற்போது தகுதி உள்ளவர்களுக்கு வழங்குவோம் என்றுகூறுகிறார்கள்
சட்டமன்ற தேர்தல் போது தகுதி உள்ளவருக்கு வழங்குவோம் என்று கூறியிருந்தால் திமுக தகுதி என்ன என்பதை அன்றைக்கு மக்கள் நிரூபித்து இருப்பார்கள். தற்போது ஸ்டாலின் ஆட்சியில் கள்ளச்சாரய சாவு அதிகரித்து போல் கருணாநிதி ஆட்சி காலத்தில் கள்ளச்சார சாவு அதிகரித்து இருந்தது. திமுக ஆட்சியில் 2006 ஆண்டில் 126 கள்ளச்சாராய சாவு, 2007 ஆம் ஆண்டில் 135 கள்ளச்சாராயசாவு, 2008ஆம் ஆண்டில் 101 கள்ளசாரய சாவு ,2009 ஆண்டில் 149 கள்ளசாராயசாவு, 2010ஆண்டில் 185 கள்ளசாரயசாவு சாவு நடைபெற்று உள்ளது. கல்யாண வீட்டில் மது விற்பனை, விளையாட்டு மைதானத்தில் மது விற்பனை என்ற சட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்தார்.இதனால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுவிட்டால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட உடன் வாபஸ் பெற்று விட்டார். ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகியுள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, கல்வி கடனை ரத்து செய்யவில்லை இதனால் இவர்கள் மாணவர்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.இன்றைக்கு கடன் சுமையிலே தமிழகம் தலை தாழ்ந்திருக்கிறது என்பதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கிற புள்ளி விபர தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை காட்டுகிறது. முதல் முதலாக தமிழகத்திற்கு கடன் சுமை என்று வந்ததே 2006 இல் இருந்து 2011 வரை நடைபெற்ற கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் வந்தது அந்த கடன் சுமை ஒன்னரை லட்சம் கோடியாகும்.
கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிகாலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள், நகராட்சிகளுக்கு புதிய கட்டிடங்கள், மாநகராட்சிக்கு புதிய கட்டிடங்கள், மாவட்ட ஆட்சியருக்கு புதிய கட்டடங்கள், வட்டாட்சியருக்கு புதிய கட்டிடங்கள் கோட்டாட்சியார்க்கு புதிய கட்டிடங்கள், புதிய யூனியன் அலுவலகங்கள் உள்ளிட்ட மூலதன செலவுகள், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் இது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி அந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி தான் கடன் சுமை இருந்தது.
இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை சீர்மிகு நிர்வாகமாக மாற்றுவேன் என்று கூறினார் ஆனால் இன்றைக்கு சீரழிந்த நிர்வாகமாக காட்சியளிப்பது நமக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புள்ளி விவரங்களோடு வெளியிட்டு இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளிலே 2021,2022 ஆண்டில் 87 ஆயிரத்து 977 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு, 2022,2023ஆம் ஆண்டில் முதல் 11 மாதங்களில் தமிழகம் 68 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டனர், குடிமாரமத்து திட்டத்தை நிறுத்திவிட்டனர், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர், அம்மா உணவகத்தை படிப்படியாக நிறுத்தி வருகின்றனர் ,2000 அம்மா மினி கிளினிக்கை மூடி விட்டனர் எந்த மூலதன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை அப்படி என்றால் இவ்வளவு கடன் சுமை எப்படி ஏற்பட்டது. ரிசர்வ்ஆப் இந்தியா வெளியிட்ட இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பதால் தமிழகத்தில் தலை தாழ்ந்து கிடக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கும், மதுரையில் கலைஞர் நூலகத்தை 114 கோடி ரூபாயில் கட்ட ஆர்வம் காட்டும் திமுக அரசு, இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கும்பாபிஷேகம் செய்வதற்கும், வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிப்பதற்கும் அக்கறை காட்டாதது ஏன்?
இந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, ஒன்பது மாத இடைவெளியில் 50 லட்சம் சிறு,குறு நிறுவனங்கள் பாதிக்கும் வகையில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு , இலவச மின்சாரம் கேள்விக்குறி, இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது தமிழகத்தில் வறுமை வாடிக் கொண்டுள்ளது.முன்னுக்கு பின் முரணாக பேசி, பொய் சொல்வதில் ஸ்டாலின் புலவராக ஸ்உள்ளார் ஸ்டாலின் மக்களின் காவலராக இல்லை இன்றைக்கு மக்களின் காவலராக எடப்பாடியார் உள்ளார். கள்ளச்சாராயம் சாவில் தமிழகம் முதலிடம், நிர்வாக சீர்கேட்டில் தமிழகம் முதலிடம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடம், ஊழல் செய்வதில் தமிழகம் முதலிடம், இதே வரிசையில் தமிழகம் கடன் வாங்கும் பட்டியலில் முதலிடமாக உள்ளது.
ஆகவேதான் இந்த நாட்டு மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் மக்கள் போற்றும் அம்மாவின் ஆட்சி மலரும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *