கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் ஆறாவது முறையாக 3000 கடிதங்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாசாமி தலைமையில் சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா இளம் போராளி மருத்துவர் சின்ன அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்தை தமிழக அரசு மே 31ஆம் தேதிக்குள் நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி ஆறாவது முறையாக 3000 தபால்கள் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் வீ.பாரதிதாசன் அவர்களுக்கும் அனுப்பட்டது நிகழ்ச்சியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி , மாவட்ட தலைவர் கே பி சேகர் உட்பட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்